ஹிப்னாடிஸம் உங்களுக்கும் உதவலாம்...! - இதைப்படிங்க...
Posted by Unknown on 11:25 with No comments
நண்பன் ஒருவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.
ஹிப்னாடிஸம்,மெஸ்மரிசம் என்று நிறைய புத்தகங்கள் வைத்திருப்பான். அதில் அவனுக்கு பெரும் ஆர்வம்.யாரை வசியம் செய்வதற்கு என்று தெரியவில்லை.அவன் வசியம் செய்ய கற்றுக்கொண்டானா என்பது தெரியவில்லை.ஒரு பெண் அவனை வசியம் செய்து இழுத்த இழுப்புக்கு ஓடிக்கொண்டிருந்தான்.கடைசியில் அதேபெண்ணை திருமணம் செய்ய வேண்டிய கஷ்டமும் நேர்ந்த்து.
புத்தகம் படித்தெல்லாம் கற்றுக்கொள்வது அவ்வளவு சுலபமில்லை என்பதே உண்மை.சரி ஹிப்னாடிஸம் என்றால் என்ன? தூக்கம் போன்ற நிலையில் ஒரு நிபுணருக்கு கட்டுப்பட்டு இருக்கும் நிலை.மன நல சிகிச்சைகளில் அபூர்வமாக பயன்படுத்தப்படுவது.
உண்மையில் இது மிகப்பழமையான விஷயம்.மேஜிக்,மாய வித்தை போன்றவை எல்லாம் இதற்கு முன்னோடிகள்.பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்பவரால் புகழ் பெற்றது.புகழ்பெற்ற உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட் ஆழ் மனதை வெளிக்கொணர இம்முறையை பயன்படுத்தினார்.
ஹிப்னாடிஸம் சிகிச்சை முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மருத்துவத்துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அறிதுயிலில் ஆழ்த்தவும்,தேவையற்ற,விரும்பாத சில பழக்க வழக்கங்களை மாற்றவும்,ஆழ் மனதில் அமுக்கப்பட்ட நினைவுகளை வெளிக்கொணரவும் இது பெருமளவில் உதவுகிறது.தாழ்வு மனப்பான்மை ,பதட்டம் போன்ற சிக்கல்களுக்கும் நல்ல தீர்வு கிடைக்கலாம்.
பொதுவாக கதைகளில் காணப்படுவது போன்றோ,சினிமாவில் காட்டப்படுவது போன்றோ யாரையும் கட்டாயப்படுத்தி வசியம் செய்வது சாத்தியமில்லை என்பதே உண்மை.சிகிச்சைக்கு உட்படுபவர் முழுமையாக ஒத்துழைக்கவேண்டும்.அதே போல கட்டாயப்படுத்தி தவறான எண்ணங்களையும் விதைக்க முடியாது.
உதாரணமாக சிறு வயதில் ஏற்பட்ட சம்பவத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பார்.இப்போது நடைமுறை வாழ்க்கையில் அது பிரச்சினையாக இருக்கும்.அதெல்லாம் வசியத்தில் வெளிக்கொண்டு வரலாம்.அதே சமயம் வெளியே சொல்ல நினைக்கும் விஷயம் மட்டுமே வெளிவரும்.எல்லா ரகசியத்தையும் வெளியே கொட்டிவிட மாட்டார்கள்.
சுய வசியத்தின்(self hypnosis) மூலம் அனைவரும் பயன் பெற முடியும்.உங்களுக்கு நீங்களே சில கட்டளைகளை மனதிற்கு கொடுப்பது மூலம் நீங்கள் விரும்புவதை அடையலாம்.சாதனை செய்யலாம்.
அமைதியான சூழலில் உடலை தளர்வாக வைத்துக்கொண்டு “நான் தொழிலதிபர் ஆவேன்” என்று மனதிற்கு சொல்லிக்கொண்டு வந்தால் ஒரு நாள் ஆகிவிடுவதும் சாத்தியமே!
நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அப்படி ஆவீர்கள் என்பார்களே அதுதான்.ஆழ்மனதில் கட்டளைகள் ஆழமாக பதிந்து போனால் அது செயல்பட ஆரம்பித்துவிடும்.இதற்கெல்லாம் உரிய நிபுணர் உதவி இருந்தால்தான் நல்லது.
Categories: ஆரோக்கியம், செய்திகள்

0 comments:
Post a Comment