உண்மை சம்பவ கதையில் ரவுடியாக நடிக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன்..!
Posted by Unknown on 10:06 with No comments
‘ஆக்கம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் இப்படத்தை இயக்குனர் களஞ்சியத்திடம் உதவியாளராக பணியாற்றிய ஞானசம்பந்தம் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகனாக சதீஷ் ராகவன் என்ற புதுமுகம் நடிக்கிறார். வைதேகி கதாநாயகியாக நடிக்கிறார். மலையாளத்தில் சில படங்களில் நடித்த இவர், தற்போது இந்த படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். பிரபல நடிகர் ரஞ்சித், தருண்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு பிரபல ரவுடியாக நடித்துள்ளார். ஜெயிலுக்குள் ரவுடியாக உருவாவதுபோல் இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை முழுக்க முழுக்க வடசென்னையிலேயே படமாக்கியுள்ளனர். இரண்டு கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ள படக்குழு தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பிசியாக இருக்கின்றனர்.
படம் குறித்து இயக்குனர் சொல்லும்போது, சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படத்தை எடுத்திருக்கிறோம். முழுக்க முழுக்க வடசென்னையில் நடக்கும் கதை என்பதால் ராயபுரம், புளியாந்தோப்பு, வியாசர்பாடி, எண்ணூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம் என்றார்.
படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஜி.ஏ.சிவசந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனெவே களஞ்சியம் இயக்கத்தில் உருவான ‘கருங்காலி’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.
Categories: சினிமா

0 comments:
Post a Comment