Thursday, 9 October 2014

உண்மை சம்பவ கதையில் ரவுடியாக நடிக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன்..!


‘ஆக்கம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் இப்படத்தை இயக்குனர் களஞ்சியத்திடம் உதவியாளராக பணியாற்றிய ஞானசம்பந்தம் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகனாக சதீஷ் ராகவன் என்ற புதுமுகம் நடிக்கிறார். வைதேகி கதாநாயகியாக நடிக்கிறார். மலையாளத்தில் சில படங்களில் நடித்த இவர், தற்போது இந்த படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். பிரபல நடிகர் ரஞ்சித், தருண்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு பிரபல ரவுடியாக நடித்துள்ளார். ஜெயிலுக்குள் ரவுடியாக உருவாவதுபோல் இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை முழுக்க முழுக்க வடசென்னையிலேயே படமாக்கியுள்ளனர். இரண்டு கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ள படக்குழு தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பிசியாக இருக்கின்றனர்.

படம் குறித்து இயக்குனர் சொல்லும்போது, சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படத்தை எடுத்திருக்கிறோம். முழுக்க முழுக்க வடசென்னையில் நடக்கும் கதை என்பதால் ராயபுரம், புளியாந்தோப்பு, வியாசர்பாடி, எண்ணூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம் என்றார்.

படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஜி.ஏ.சிவசந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனெவே களஞ்சியம் இயக்கத்தில் உருவான ‘கருங்காலி’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.

Tuesday, 5 August 2014

முதன்முதலாக வெளியுலகை தொடர்பு கொண்ட அமேசான் பழங்குடியினர்

 ஸ்பெயின்-பெரு எல்லைப்பகுதியில் உள்ள பெருவியன் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் மீது போதைபொருள் கடத்தும் கும்பல் தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றுவருகிறது. அவர்களால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் வெளி உலகிற்கு வந்து தங்களுக்கு உதவுமாறு கேட்டுள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் முறையாக வெளியுலகை தொடர்பு கொண்ட பழங்குடியினருக்கு உயிரை கொல்லும் சுவாசக்கோளாறு நோய் இருப்பது தெரியவந்துள்ளது. மானுட சமூக தொடர்பிலிருந்து ஒதுங்கி வாழ்ந்தாலும், அவர்களில் பலர் அந்நோயிலிருந்து மீண்டு வாழ்ந்து வருகின்றனர். பல ஆண்டுகளாகவே காடுகளில் அவர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்பட்டாலும் முதல் முறையாக தற்போது தான்  வெளியுலக தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள அவர்கள் முன்வந்துள்ளனர்.

சிம்பாட்டியா கிராமத்தில் உள்ள என்விரா ஆற்றில் ஆடைகளற்ற நிலையில் காணப்பட்ட ஏழு பழங்குடியினர், பிரேசிலின் அசானிங்கா பழங்குடியின உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு, போதைப்பொருள் கடத்தல்காரர்களான இந்தியரல்லாதவர்கள் தாக்குவதால் தங்களை தற்காத்துக்கொள்ள ஆயுதம் வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். இந்தியரல்லாதவர்களால் கொல்லப்பட்ட தங்கள் இனத்தை சேர்ந்த மூன்று பேரை ஒரே இடத்தில் புதைத்ததாக தெரிவித்த அவர்கள், மேலும் சிலரது உடல்களை பிணந்தின்னி கழுகுகள் தின்றதாகவும் தெரிவித்தனர். தங்கள் குடில்களை சேதப்படுத்திய போதைபொருட்கள் கடத்தும் கும்பல் தங்களை அங்கிருந்து காலி செய்யும்படி மிரட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஏழு ஆதிவாசி பழங்குடியினரின் வீடியோ காட்சி அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கண்ணைச் சுற்றிக் கருவளையம் போக என்ன செய்வது..?

கண்ணைச் சுற்றிக் கருவளையம் போக என்ன செய்வது ? வராமல் இருக்க எதை தவிர்ப்பது !!

இன்றைய உலகில் உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தேகருவளைத்தை போக்கலாம்.

*எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.

* தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.

* சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்இந்த நாகரீக உலகில் முக்கால்வாசிப் பேருக்குக் கண்களை சுற்றிலும் கருமையாக வளையம் போன்று காட்சியளிப்பது பொதுவாகிப் போய்விட்டது. ஆண்களைக் காட்டிலுட்ம பெண்களுக்கே இது அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு வயது வரம்பு கிடையாது. எல்லா வயதினருக்கும் இது பரவலாக இருக்கிறது. மேலும் வயதாக இது அதிகமாகிக் கொண்டே போகிறது.

* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.

இக்கருவளையம் தோலில் ஏற்படும் அதிகமான 'பிக்மெண்டேஷன்' காரணமாக ஏற்படுகிறது. இது ஒருவகை வியாதியல்ல. இது கண்ணுக்குக் கெடுதலோ மற்ற எந்த வகையிலும் தொந்தரவோ அளிப்பதில்லை. இருப்பினும் சிலர் இதுகுறித்து மிகவும் கவலைப்படுகின்றனர். மற்ற அழகுப் பிரச்னைகளைப் போலவே இதற்கும் பல காரணங்கள் உண்டு. இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைந்த உணவும் இதற்கு ஒரு காரணம். புற்றுநோய், டி.பி., நிமோனியா போன்றவைகளால் தாக்கப்பட்டாலும் உடலில் சத்துக் குறைந்து இது ஏற்படுகிறது. மேலும் அதிக வேலை, தூக்கமின்மை அசதி போன்ற காரணங்களும் இதற்கு பொறுப்பாகின்றன.

கண்களைச் சுற்றயுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே அதிக வெயிலில் வெளியே செல்வது, வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்வது போன்றவை கண்களை அதிகம் பாதித்து கருவயைம் ஏற்பட ஏதுவாகிறது. அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவையும் கண்களைப் பாதிக்கும்.
ஒருமுறை கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்பட்டால் அதை சரி செய்வது மிகவும் கடினமாகும். மேற்கண்ட கரணங்களைத் தவிர்த்தால் நாளடைவில் சிறிய முன்னேற்றமிருக்கும். அதற்கான சில தடுப்பு முறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு இதற்கு சிறந்த வழியாகும். தினசரி உணவில் கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், சூப் இவற்றைச் சேர்த்துக் கொண்டால் இவற்றிலுள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை உடலில் கலந்து நல்ல பலனளிக்கும். உணவைப் பொறுத்தவரை நாம் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. ஏனெனில் இந்தப் பிரச்சனையில் உணவு முக்கிய பங்கு பெறுகிறது. உணவில் போதிய சத்துக்கள் கிடைக்காவிடில் வைட்டமின் ஏ,ஈ, கால்சியம், இரும்புச்சத்து அடங்கிய மருந்து, மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொள்ளலாம். நமக்கு வசதிப்பட்ட முறையில் மாத்திரையாகவோ, டானிக்காகவோ, ஊசியாகவோ இச்சத்துக்கள் கொண்ட மருந்துகளைப் பெற்று உபயோகிக்கலாம்.

அடுத்ததாக மனநிலை இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஒருவருக்கு அதிக மனவருத்தம், மனஉளைச்சல் ஏற்பட்டால் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்தப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாது. தொடர்ந்து அதையே நினைத்து கொண்டிருந்தால் உடல் நிலைதான் பாதிக்கப்படுமேயல்லாம் பிரச்சினை தீரப்போவதில்லை. எனவே, அதைப் பற்றி வருந்தாமல் அப்பிரச்சினைக்கு முடிவு காணும் வழியே யோசித்தால் உபயோகமாக இருக்கும். ஒரு பிரச்னை ஏற்பட்டால் பதற்றமோ ஆத்திரமோ கொள்ளாமல் அமைதியாக இருந்து சிந்தித்து வழி காண முயற்சி செய்தால் பிச்சினையும் தீரும். உடல்நிலையும் பாதிக்காது.

வெளியே வெயிலில் செல்லும்போது கண்களுக்கு கண்ணாடி அணிந்து சென்றால் இக்கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்பவர்களுக்கேற்ப தனிப்பட்ட முறையில் கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன. கண்களுக்கு அதிகபடியான வேலை கொடுப்பர்களுக்கும் இக்கருவளயம் உண்டாகுகிறது. சில முறையான வழிகளைக் கடைப்பிடிப்பதால் அதைத் தடுக்கலாம்.

படிக்கும்போது விளக்கொளி சரியாக அமைந்திருக்க வேண்டும். ஒளி புத்தகத்தில் நேராகப் படுமாறு இருக்கவேண்டும். டைப் அடிப்பவர்கள் நூலகத்தில் இருப்பவர்கள் போன்ற சில குறிப்பிட்ட வேலை செய்பவர்களுக்குக் கண்களுக்கு அதிகப்படியான வேலை கொடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் யோகசனம் மற்றும் சில பயிற்சிகள் செய்து கண்களுக்கு ஓய்வு தர வேண்டும். கண்கள் மிகவும் களைத்துப் போகும் போது காய்சசாத பால் பஞ்சைத் தோய்த்துக் கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் சிறிது நேரம் வைத்துக்கொள்ள வேண்டும். பாலுக்குப் பதிலாக பன்னீரில் பஞ்சைத் தோய்த்து இதேபோல் செய்யலாம்.

1. வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் பஞ்சை தோய்த்து கருவளையங்களின் மேல் வைக்கலாம்.

2. வெள்ளரிச்சாறும் உருளைக்கிழங்கு சாறும் கலந்து பஞ்சைத் தோய்த்து கண்களில் வைக்கலாம்.

3.வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இவற்றை வட்டவட்டமாக வெட்டி கண்களில் மேல் வைக்கலாம்.

4. கடலைமாவில் எலுமிச்சைக்காறு கலந்து பசை போல் குழைத்து கருவளையங்களின் மேல் தினமும் தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.

5. முல்தானி மட்டியையும் பன்னீரையும் குழைத்துப் பேசி வரவும்.
மேலும் நல்ல, சிறந்த மேக்கப் கருவளையத்தை குறைத்துக் காட்டும். வெளிர்நிற ஃபவுண்டேசனை உபயோகித்தால் இக்குறையை மறைக்கலாம்.

6. கண் அடியில் கருமை இருந்தால் பார்மஸியில் கிடைக்கும் ஈஸ்ட் மாத்திரை வாங்கி அதைத் தண்ணீரில் கலந்து கண்ணுக்கு அடியில் தடவலாம்.

7. கண்களுக்கடியில் கருவளையம் இருந்தால் உருளைக்கிழங்கைத் துருவி மெல்லிய துணிகளில் கட்டி கண்களின் மீது 20 நிமிடம் வைத்து எடுக்கவும். வெள்ளரித் துண்டுகளையும் வைத்து எடுக்கலாம். டீ டிகாக்ஷனில் ஊறிய பஞ்சினையும் வைத்து வரலாம்.

8. கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.

மருந்து வாங்கும் போது நாம் கவனிக்கப்பட வேண்டியவை..!

மருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை குறித்து மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.

வாங்கிய மருந்துகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும்.

மருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.

மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.

மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.

மருந்துகளை சமையல் அறை, குளியல்அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள்.

மற்றவரின் நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.
மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளுக்கு மாற்றாக வேறு மருந்துகளை வாங்காதீர்கள்.

இது பற்றிய சந்தேகம் உள்ள சென்னைவாசிகள், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருந்துகள் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மையத்தை அணுகலாம். மேலும் 044-24338421 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர் மண்டல அலுவலக தொலைபேசி எண்கள் வருமாறு, மண்டலம் (1)-24328734, மண்டலம் (2)-24310687, மண்டலம்(3)-24351581.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவலி அடிக்கடி வருதா...? - அப்போ இதைப்படிங்க...!

அனைவரும் இன்றைய நாள் நன்றாக இருக்க வேண்டும், எந்த ஒரு டென்சனும் வந்துவிடக் கூடாது என்று அன்றைய தினத்தை ஆரம்பிப்பார்கள். ஆனால் அதை தலைவலி வந்து கெடுத்துவிடும். இந்த தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்திரைகளும் உடலும் பெரும் கெடுதலைத் தான் ஏற்படுத்தும். ஆகவே அத்தகைய வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி சரிசெய்வதை விட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந்த தலை வலி ஏற்படுகின்றதென்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும்.

இப்போது எந்த செயல்கள் நமக்கு தலைவலியை உண்டாக்குகின்றன என்பதைப் பற்றி...

ஈரமான கூந்தல்:- காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலியை உண்டாக்கும். ஆகவே எப்போதும் தலையை ஈரத்துடன் வைக்காமல் இருந்தால், தலைவலி வருவதைத் தடுக்கலாம். அதற்காக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை கூந்தல் உதிர்தலை உண்டாக்கும்.

அளவுக்கு அதிகமான வெப்பம்:- வேலையாக வெளியே செல்லும் போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது, தலைவலியானது உண்டாகும். மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென்றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண்டாக்கும். ஆகவே நன்கு சாப்பிட்டு, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது.

வாசனை திரவியங்கள்:- உடலில் வியர்த்தால் அதிக துர்நாற்றம் வருகிறதென்று, சிலர் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த செண்ட் வாசனை, அதிக தலைவலியை உண்டாக்கும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல், மிதமாக உபயோகிப்பது நல்லது.

கம்ப்யூட்டர் திரை:- கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மேலும் டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.

தொலைக்காட்சி திரை:- கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மேலும் டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.

படுக்கையில் படித்தல்:- படுக்கும் போது புத்தகத்தைப் படிப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். ஏனெனில் இப்படி படித்தால், கண்கள் மிகவும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை பார்க்கும். ஆகவே எப்போது படிக்கும் போதும், உட்கார்ந்து படிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் உட்கார்ந்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிக குளிர்ச்சி:- அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளிர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல்லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பது போல் இருக்கும். ஏனெனில் அவை மூளையை உறைய வைத்துவிடுகிறது. ஆகவே அத்தகைய பொருளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்காக குளிர்ச்சியே சாப்பிடக் கூடாது என்பதில்லை. ஓரளவு குளிர்ச்சி உள்ள பொருளை, அளவாக சாப்பிட்டால் நல்லது.

ஆல்கஹால்:- ஆல்கஹால் பருகுவதால் கூட தலை வலி உண்டாகும். ஏனெனில் சிலர் ஆல்கஹாலை குளிர்ச்சியாக சாப்பிடுவர். சாதாரணமாக ஆல்கல் சாப்பிட்டாலே, மூளை மிகவும் தளர்ந்து இருக்கும். அதில் குளிர்ச்சியுடன் சாப்பிட்டால், தலை வலி தான் அதிகமாகும். அதிலும் அந்த வலி பருகிய மறுநாள் தான் உண்டாகும். ஆகவே குளிர்ச்சியாக சாப்பிடுவதோடு, அதிகமாக பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.

சரியான தூக்கம்:- தூக்கம் குறைவாக இருந்தாலும், அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றியமையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

நீண்ட தூர பயணம்:- பைக்கில் மிகுந்த வேகத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அதையே குளிர் காலத்தில் செய்தால், களி, ஜலதோஷம், போன்றவை ஏற்படும். அதிலும் காலை மற்றும் இரவு நேரங்களில் செல்வது தான் பெரும் பிரச்சனையை உண்டாக்கும். அவ்வாறு பிரச்சனைகள் வரும் போது, நிச்சயம் வராத வலிகள் அனைத்தும் வந்துவிடும். ஆகவே பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அல்லது ஏதேனும் துணியைக் கொண்டு, வாய் மற்றும் மூக்கை மறைத்துக் கொண்டு ஓட்ட வேண்டும்.

உடல் உறவு கொள்ள இயலாத நிலை வருவது ஏன்..?

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணுடைய உடல், கலாச்சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகியவற்றை முழுமையாக உணர்ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறியுள்ளார்.

அதாவது இதன் பொருள், ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத்திரை, மருந்துகள் எல்லாம் நம்முடைய பதட்டத்தை குறைக்கும் அவ்வளவு தான்.
சிறுநீர், மலம் ஆகியவற்றை எப்போதும் அடக்கும் பழக்கம், உள்ளாடைகளை இறுக்கமாக அணிவது, எப்போதுமே குப்புறப் படுத்துக் கொள்வது, மனதை பலவிதங்களிலும் அலைய விடுவது, கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பது, பெண்களை நிமிர்ந்து பார்க்கக் கூட வெட்கம் அல்லது அச்சம் கொள்வது, செக்ஸ் புத்தகங்களையே படித்துக் கொண்டிருப்பது,செக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பது,அழகான பெண்களின் மீது இச்சை கொண்டு விந்தை வீணாக்குவது, தனக்கு ஆண்மைக் குறைவோ என்று நினைத்து அதிகம் வருந்துவது போன்றவற்றால் உடலுறவு கொள்ள இயலாத நிலை ஏற்படும்.

நோயின்றி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான பலத்தைத் தருவது...?

நோயின்றி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான பலத்தைத் தருவது காய்கறி - பழங்கள். காய், கனிகளை மட்டுமே உண்டு வாழ்ந்த சித்தர்களும், நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை வளம் செரிந்தது. நாகரிகத்துக்கு மாறுகிறேன் என்று மனிதன் இயற்கை உணவுகளைத் தவிர்த்து, சமைத்த உணவுக்காக, தினம் தினம் வாய்க்கு கைக்கும் சண்டை போடுவதன் விளைவு பல்வேறு நோய்களுடன் போராடிக் கொண்டிருக்கிறோம்.

 'தினமும் மூன்று வகைப் பழங்களைச் சாப்பிடுங்கள். நோய் கிட்ட நெருங்காது'' என்கிற காரைக்குடி சித்த மருத்துவர் ஆறுமுக பிரபு, நாவல் பழத்தைப் பற்றி விவரித்தார்.'ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் நாவல் பழ சீசன்தான். நம் ஊர்தான் நாவல் பழத்துக்குப் பூர்வீகம்.நாவல் பழத்தில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது.

இந்தப் பழத்தை அடுத்து சீதா பழத்தில்தான் கால்சியம் இருக்கிறது. இது தவிர சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது. வைட்டமின் பி1, பி2, பி6 ஒன்றாக உள்ள மிகவும் அரிதான பழம் இது'' என்றவர், நாவல் பழத்தின் பலன்களை விவரித்தார்.'கால்சியம், எலும்புகளுக்கு உறுதியைக் கொடுப்பதுடன், உடலை வலிமையாக்கும். ரத்தத்தைச் சுத்திகரித்து ரத்த விருத்தியடையச் செய்யும்.

ரத்தசோகைக்கு மிகச்சிறந்த மருந்தே நாவல் பழம்தான். இதிலுள்ள வைட்டமின் சி உணவிலிருந்து இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும்.நாவல் பழத்திலுள்ள 'ஜம்போலினின்’ எனும் 'குளுக்கோசைடு’ உடலில் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டைத் தடுக்கிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் நாவல் பழத்தை உணவாக அல்லாமல் மருந்தாக பத்தியமிருந்து 1 மண்டலத்துக்குச் சாப்பிட்டு வர, சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் இருக்கும். நாள்பட்ட சர்க்கரை நோய் உடையவர்கள் நாவல் பழ விதையை காயவைத்து பொடியாக்கி, புளித்த மோரில் கலந்து குடிக்கலாம்.

இந்தப் பழத்தில் 'குயுமின்’ எனும் 'ஆல்கலாய்டு’ உள்ளது. இது தோலில் சுருக்கங்கள் விழுவதைத் தடுத்து வயதாவதைத் தள்ளிப்போடும். உடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன்கொண்ட 'ஆன்டி ஆக்சிடன்ட்’ ஆப்பிள், கேரட், மாதுளையைவிட நாவல் பழத்தில் அதிகம். இதனால் தோலில் ஏற்படும் வெண்புள்ளி, அரிப்பு போன்றவற்றைக் குணப்படுத்தும்.

நாவலை தொடர்ந்து உண்டுவர தோல் பொலிவு கிடைக்கும். வாய் முதல் குடல் வரை ஏற்படுகிற புண்களைக் குணப்படுத்தும். அதிகமாக சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் போக்குக் கட்டுக்குள் வரும். பசியைத் தூண்டும்.நாவல் பழம் குளிர்ச்சியானது என்பதால் உடல் சூட்டைத் தணிக்கும். கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களையும், மஞ்சள் காமாலையையும் குணப்படுத்தக் கூடியது.

 பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான சிக்கல், வெள்ளைப்படுதல், மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு ஆகியவற்றையும் நாவல் பழம் சரியாகும். நாவல் பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது என்பார்கள். இது தவறு! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய அற்புத பழம். இப்போது நகர்புறங்களில் விதையில்லா 'ஹைப்ரிட் வகை’ நாவல் பழங்கள் அதிகமாக விற்கப்படுகின்றன. இதில் கொஞ்சம்கூட சத்து கிடையாது. நாட்டு நாவல் பழத்தில் மட்டுமே மேற்கூறிய பலன்கள்!'' என்றார்.நாட்டு நாவலை உண்டு மகிழ்வோம்!