லிப் லாக் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு ஒன்றும் கவலை இல்லை..!

Posted by Unknown on 10:22 with No comments


குடும்பப்பாங்கான நடிகையாக அடையாளம் காணப்பட்ட தான் ‘நான் சிகப்பு மனிதன்' படத்தில் விஷாலுடன் லிப் லாக் காட்சியில் நடித்தது, கதைக்கு தேவைப்பட்டதால் தான் என விளக்கமளித்துள்ளார் லட்சுமிமேனன்.

கும்கி, குட்டி புலி, சுந்தரபாண்டியன்,பாண்டிய நாடு என லட்சுமிமேனன் நடிப்பில் வெளி வந்தது என்னவோ நான்கே படங்கள் தான். ஆனால், அதற்குள் ரசிகர்கள் அவரை முன்னணி நடிகைகளுள் ஒருவராக்கி விட்டனர்.

தற்போது நான் சிகப்பு மனிதன் படத்தில் மீண்டும் விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளார் லட்சுமிமேனன். இப்படத்தில் விஷாலுடன் லிப்லாக் காட்சியில் நடித்தது பற்றியும், தனது அனுபவங்களை செய்தியாளார்களுடன் பகிர்ந்து கொண்டார் லட்சுமிமேனன். அப்போது அவர் கூறியதாவது :-

நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் உதட்டுடன் உதடு முத்தம் கொடுப்பது போன்று காட்சி படமாக்கப்பட்டது. படத்தின் இயக்குநர் திரு சார் இந்த காட்சி படத்தின் கதைக்கு மிகவும் தேவைபடுவதால் அவசியம் நடிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

நானும் தொழில்முறையில் தான் இதை ஏற்றுக்கொண்டேன்.அதனால் எந்த பிரச்சனையும் இல்லை நான் இது போன்ற காட்சிகளில் நடிப்பது பற்றி எனக்கு ஒன்றும் கவலை இல்லை.

சுந்தரபாண்டியன், குட்டிபுலி பாண்டிய நாடு போன்ற திரைபடங்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. என் வாழ்வில் இது ஒரு முக்கிய பகுதியாகும்.

திரை உலகில் நேர்மறையான எதிர்மறையான கருத்துகள் வந்து கொண்டுதான் இருக்கும்.இது போன்ற கருத்துகளை நாம் எடுத்துகொள்ள கூடாது எல்லாம் பாசிடிவ்வாக எடுத்துகொண்டால் நல்லது.

படபிடிப்பில் சில வேடிக்கையான விஷயங்கள் கூட நடந்து இருக்கிறது.கும்பகோணம் படபிடிப்பில் இருந்தபோது தமிழ் ரசிகர்கள் என்னை பார்த்து ஆரவாரம் செயதனர் சிலர் என்னிடம் வந்து கைகுலுக்கி தங்களது மகிச்சியை தெரிவித்தனர்.

சென்னையில் நான் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த போது பொறியாளர் ஒருவர் வந்து நான் தீவிர ரசிகன் என்னுடைய வீட்டில் உங்களது போட்டவை தான் மாற்றி வைத்துள்ளேன் என்று கூறினார் என்னுடைய செல்போனிலில் கூட உங்களது புகைபடத்தைத் தான் வைத்து உள்ளேன் என்று கூறினார்.

இதை பார்த்த நான் வியந்துபோனேன்.எனக்கு இவ்வளவு ரசிகர்களா என பார்த்து மெய்சிலிர்த்து போனேன்.

நான் தமிழ் படங்களில் நடிப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் இது ஒரு வெற்றியாக கருதுகிறேன் இது போன்ற ரசிகர்கள் எனக்கு கிடைத்துள்ளதால் நான் தற்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்' என இவ்வாறு லட்சுமிமேனன் தெரிவித்துள்ளார்.