நினைத்தது நடந்து விட்டதால் இமயமலை சென்றார் நயன்தாரா...!

Posted by Unknown on 22:04 with No comments


இமயமலைக்கு சென்று அங்குள்ள கோவில்களில் வழிபாடு செய்துள்ளார் நயன்தாரா.

உதயநிதி ஜோடியாக நண்பேன்டா படத்திலும் ஜெயம்ரவி ஜோடியாக பெயரிடப்படாத படமொன்றிலும் நடித்து வருகிறார் நயன்தாரா.


நண்பேன்டா படப்பிடிப்பு கும்பகோணத்தில் முடிவடைந்தது. ஜெயம் ரவியுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு டெராடூனில் துவங்கியுள்ளது.


அங்கு தான் நடிக்க வேண்டிய காட்சிகளை முடித்து கொடுத்து விட்டு நேராக இமயமலை சென்றார்.


இமயமலை சென்ற அவர் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தார். உடம்பில் காவி துண்டை போர்த்திக் கொண்டு நெற்றியில் சந்தனத்தால் சூலாயுதம் வரைந்தார். பிறகு ஹரித்வார், ரிஷிகேஷ் பகுதிகளுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.

நீலகண்ட மகாதேவர், சப்தசரோவர், லட்சுமணன் சூலம், ரெமிமேபர், கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டார்.


கார் செல்ல முடியாத இடங்களில் நடந்தே சென்று வழிபட்டார்.
நயன்தாரா இந்து மதத்தில் தீவிர நம்பிக்கையுள்ளவராக மாறியுள்ளார்.


எந்த ஊருக்கு படப்பிடிப்புக்கு போனாலும் அங்குள்ள கோவில்கள் பற்றி தெரிந்து கொண்டு நேரில் போய் சாமி கும்பிட்டு வருகிறார்.