அஞ்சலியின் திருமணம் - திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின...!
Posted by Unknown on 07:42 with No comments
சித்தி பாரதிதேவியுடன் பிரச்சனை ஏற்பட்டு ஆந்திராவில் செட்டிலான அஞ்சலி இப்போது எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லையாம். இதனால் அவர் எங்கே போனார் என்பது மர்மமாகவே உள்ளது.
தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அஞ்சலி திடீரென்று ஒருநாள் தனது சித்தி பாரதிதேவி கொடுமைப்படுத்துவதாக பரபரப்பு புகார் கூறினார். உடனே தனது சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு எஸ்கேப் ஆனார்.
சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் ஹைதராபாத் போலீசில் ஆஜரானார். அதன் பிறகு ஹைதராபாத்திலேயே தங்கி இருந்தார். முன்பு போல் பட வாய்ப்புகளும் கிடைக்காததால் நடிக்காமல் இருந்தார். அவர் கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு மசாலா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.
அவர் உடல் எடை கூடிப்போய் விட்டதால் தொடர்ந்து நடிக்க விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும் சொன்னார்கள். மேலும் தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவின.
இந்த நிலையில் சமீபகாலமாக அஞ்சலியை ஹைதராபாத்திலும் காணவில்லை. மீண்டும் அவர் மாயமாகி விட்டதாக செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளன.
அவருடைய இரண்டு மொபைல் போன்களுக்கு தொடர்பு கொண்டால் எப்போதும் பார்த்தாலும் அது சுவிட்ஸ்-ஆப் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. இதனால் தெலுங்கு திரையுலகினர் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் திணறி வருகிறார்கள்.
ஆனால் அஞ்சலிக்கு ஹைதராபாத்தில் இருக்க பிடிக்கவில்லை என்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெரிய தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரம் மேற்படி தகவல்கள் எதுவுமே நம்பும்படியான தகவல்களாக இல்லாததால் அஞ்சலியை தேடித்திரியும் அவரது நெருங்கிய நண்பர்கள் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்
Categories: சினிமா செய்திகள்

0 comments:
Post a Comment