சிவகார்த்திக்கேயனுக்கு போட்டியாக சன் டி.வி களமிறக்கும் ஹீரோ...!

Posted by Unknown on 01:38 with No comments


மியூசிக் சேனலில் நேயர்களுடன் உரையாடி அவர்களுக்கு பிடித்த பாட்டை போட்டுக் கொண்டிருந்த தொகுப்பாளர் சுரேஷ் ரவி, சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.


 படம் அதிமேதாவிகள். அப்சலுட் பிக்சர்ஸ் சார்பில் பெர்லிசிங் தயாரிக்கிறார். சுரேசுக்கு ஜோடியாக நடிக்கிறார் இஷாரா. கலாபவன்மணி, தம்பி ராமையா, ரேணுகா, நடிக்கிறார்கள்.


கே.பாக்யராஜ் உதவியாளர் ரஞ்சித் மணிகண்டன் இயக்குகிறார்.

"கல்லூரி மாணவர்கள் சிலர், தங்களை அதிமேதாவிகளாக நினைத்துக் கொண்டு இஷ்டத்துக்கு எதையாவது செய்து மாட்டிக் கொள்வார்கள்.


அதன் பிறகு அதிலிருந்து வெளி வரமுடியாமல் தவிப்பார்கள். அப்படி தவிக்கிற ஒரு மாணவனும், அவனை காப்பாற்றுகிற ஒரு அதிமேதாவியின் கதை.


சீரியசான விஷயங்களை ஜாலியாக சொல்றோம்" என்கிறார் இயக்குனர் ரஞ்சித் மணிகண்டன்.