தனக்குத் திருமணம் நடக்குமா இல்லையா என்று கூடத் தெரியவில்லை - புலம்பும் சிம்பு..!

Posted by Unknown on 07:32 with No comments


சமீபமாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள சிம்பு தனது நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த மிகவும் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார்.

ஹன்சிகாவுடனான காதல் முறிவு மற்றும் நயன்தாராவுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் நிலவிவரும் கருத்துக்கள் மற்றும் கேலிகளுக்கும் பதிலளித்த சிம்பு தனக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் குறைந்துவருவதாகவும் தெரிவித்தார்.

சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, சினிமாவைத் தாண்டி மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் எண்ணம் எழுந்துவருவதாகவும்,சினிமாவில் இருந்துகொண்டு தனது எதிர்காலத்தை வீணடிக்கிறேனோ என்ற எண்ணம் தற்பொழுது மேலோங்கி வருவதாகவும் கூறினார்.

மேலும் தனக்கு இப்பொழுது போட்டி, பொறாமை மற்றும் கோபம் முதலிய எல்லா உணர்வுகளும் அறவே இல்லை என்றும் இதனாலேயே தன்னால் தனுஷுடன் நட்புடன் பழகமுடிகிறது என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளார்.

தனது காதல் முறிவுகளைக் குறித்து சமூக ஊடகங்களில் மிகவும் கிண்டலடிப்பதாகக் கூறி வேதனைப்பட்ட சிம்பு, எல்லா விசயங்களிலும் சரியான
முடிவுகளை எடுக்கும் தான் காதல் விசயங்களில் மட்டும் தவறான முடிவுகளை எடுத்துவிடுவதாகவும் வேதனையுடன் கூறினார்.

தனக்குத் திருமணம் நடக்குமா இல்லையா என்று கூடத் தெரியவில்லை என்று கூறிய சிம்பு, ஒருவேளை தான் திருமணம் செய்து கொண்டால், அந்தப் பெண் ஒரு பெண்ணைப் போல இருக்க வேண்டும் என்றும், இக்காலத்துப் பெண்கள் ஆண்களைப் போல நடந்துகொள்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

தற்போதைக்கு தனக்கு மிகவும் நெருங்கிய நண்பனாக அனிருத் மற்றும் பிரேம்ஜி ஆகியோர் இருப்பதாகக் கூறியுள்ள சிம்பு, இன்றைய இளம் தலைமுறை நாயகர்களில் தன்னை மிகவும் கவர்ந்தவராக விஜய் சேதுபதியைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது படம் வெளியாகி இரண்டு வருடங்களுக்கும் மேலான பிறகும் தன்னை விடாது பிடித்திருக்கும் தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பினை இவ்வருடத்தில் வெளியாகும் படங்கள் பூர்த்தி செய்யும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.