மனிஷாயாதவுடன் கொடைக்கானல் சென்ற விஜய்

Posted by Unknown on 02:40 with No comments


நீர்ப்பறவை திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சீனுராமசாமி இயக்கும் படம் இடம் பொருள் ஏவல்.

விஜய்சேதுபதி – விஷ்ணு கதாநாயகர்களாக நடிக்கும் இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், கவிப்பேரரசு வைரமுத்து ஆகிய இருவரும் முதன்முறையாக இணைகின்றனர்.யுவன்சங்கர் ராஜா இசைக்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுவது இதுவே முதல் முறையாகும்.

இயக்குனர் சீனு ராமசாமி – தயாரிப்பாளர், இயக்குனர் லிங்குசாமி இருவரின் விருப்பத்தினை ஏற்று, யுவன்சங்கர் ராஜா – வைரமுத்து கூட்டணி இடம் பொருள் ஏவல் படத்திற்காக முதன்முறையாக இணைகிறது.

இப்படத்தின் முதல்கட்டபடப்பிடிப்பு கொடைக்கானலில் துவங்கியுள்ளது. விஜய்சேதுபதி, மனிஷாயாதவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்றுமுதல் எடுக்கப்பட்டு வருகிறது.

விரைவில் விஷ்ணு விஷாலும் இவர்களுடன் இணைந்து கொள்ளவிருக்கிறாராம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக மனிஷா யாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஷ்ணு விஷாலுக்கு ஜோடி கிடையாதாம்.

தென்மேற்கு பருவகாற்றுக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் சீனுராமசாமியோடு சேர்ந்துள்ளார் விஜய்சேதுபதி