போராடி வெற்றி பெற்றார் சமுத்திரக்கனி ...!
Posted by Unknown on 11:39 with No comments
இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வாசன் விஷூவல் வெஞ்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த நிமிர்ந்து நில் திரைப்படத்தின் வெளியீட்டில்
தொடர்ந்து பிரச்னை மேல் பிரச்னையாக உருவாகிவந்தது. இரண்டு மூன்று முறைகள் இப்படத்தின் வெளியீட்டுத்தேதி தள்ளிவைக்கப்பட்டு இறுதியாக கடந்த மார்ச் 8 ஆம் தேதி வெளியானது.
ஜெயம் ரவி, அமலா பால்,சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு
சமூகத்திற்கு அட்டகாசமான ஒரு கருத்தினையும் எடுத்துக் கூறுவதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
லஞ்சம், ஊழல் போன்ற குற்றங்களை மையப்படுத்தி உருவானதாலோ என்னவோ இப்படத்தின் வெளியீட்டில் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க நேர்ந்தது.
ஆனால் படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பு படக்குழுவிற்கு மாபெரும் உந்து சக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஜெயம் ரவி மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இப்படம் அமையும் என்றும் ரசிகர்கள் கருத்துத்
தெரிவித்துவருகின்றனர்.
Categories: சினிமா செய்திகள்

0 comments:
Post a Comment