வெளிநாட்டில் வாழ்பவர்களை நாட்டுக்கு வரவிடாமல் தடுப்பது எது..?
Posted by Unknown on 23:35 with No comments
யார் என்ன சொன்னாலும் நாட்டில் இருப்பவர்கள் இன்னும் வெளிநாடு வர துடிப்பதுக்கு எது காரணம்?
எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், ஒரே காரணம்
பணம்.சம்பாதித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசை.
வெளிநாடு சென்றால்தான் ஊரில் உள்ள கடன்களை அடைக்க முடியும் என்ற சூழ்நிலை.
•பிறந்த நாட்டை விட்டு பிரிந்து உறவுகளை விட்டுவிட்டு தனியனாய் உரிமைகள் அற்று சிதறி கற்பனை வாழ்வில் மட்டுமே கனவுகளில் லயித்து நிஜமற்ற கானல்நீராய் நீள்கிறது எங்கள் வாழ்க்கை..!
•எனக்கொரு கனவு கடனில் இருக்கும் வீட்டை என் காலத்திலாவது கட்டி மீட்டிட வேண்டும்..!
•நண்பனுக்கொரு கனவு தன்னோடு கஷ்டம் போகட்டும் தன் தமையன்களுக்காவது நல்ல படிப்பை நல்கிட வேண்டும்..!
•அறைத் தோழன்னுக்கோர் கனவு அப்பாவின் ஆப்பரேசனுக்கு பணம் சேர்த்து மீளாத் துயரில் இருக்கும் குடும்பத்தை மீட்டிட வேண்டும்..!
•தோழியின் கனவு தான் முதிர்கன்னி ஆகிவிட்ட போதும் தன் தங்கைகளுக்கு திருமணம் செய்து பார்த்து மகிழ்ந்திட வேண்டும்..!
•இப்படியாய் நாங்கள் கனவுகள் வெவ்வேறு பணம் ஒன்றே பிரதானமாய் எல்லோரும் வெளிநாட்டில்..!
•காய்ச்சல் வந்ததென்றால் கஞ்சி கொடுக்க தாயில்லை.
அன்பை பகிர்வதற்கு அருகில் என் தங்கை இல்லை.
அதிகாரம் செலுத்திட அருகாமையில் அப்பா இல்லை.
சோகம் சுமந்தோமேன்றால் ஆற்றுவதற்கு ஆளில்லை.
சொல்லொண்ணா துயரில் நாங்களும் அனாதைகள்தான். நாடுகடந்து வாழ்வதால் நாங்களும் அகதிகள்தான்..!
Categories: செய்திகள்

0 comments:
Post a Comment