நான் சிகப்பு மனிதனின் செம போனியாம்...!
Posted by Unknown on 04:02 with No comments
பாண்டிய நாடு படத்தின் வெற்றியை அடுத்து விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வரும் ஏப்ரல் 11ஆம்தேதி உறுதியாக ரிலீஸாகும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நான் சிகப்பு மனிதன் படத்தின் வெளிநாட்டு உரிமையை யுனிட்டைட் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது.இந்தியா தவிர உலகம் முழுவதும் இந்த நிறுவனம் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை அதிக அளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளது.
இதுவரை போகாத மிகப்பெரிய தொகைக்கு வெளிநாட்டு உரிமம் விற்பனை ஆகியுள்ளதாகவும், விஷால் போட்ட முதலீட்டின் பெரும் பகுதி இந்த வெளிநாட்டு உரிமத்திலேயே வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஷால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.
விஷால் – திரு இணையும் மூன்றாவது படம் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஊடகங்களும் படத்தை குறித்து பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் ஆர்வம் மிகுதியாவதாக கூறப்படுகிறது.
Categories: சினிமா செய்திகள்

0 comments:
Post a Comment