தி லவ்லி லேடீஸ்’ பாடலுக்கு விஷால்- இனியா , வித்தியாசமான குத்தாட்டம்.

Posted by Unknown on 23:31 with No comments


விஷால் -லட்சுமி மேனன் நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த படத்தின் பாடல்களில் தி லவ்லி லேடி என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியது. இந்த பாடலை மிக விரைவில் படமாக்க உள்ளனர்.


முதலில் சாதாரணமாக படமாக்க விரும்பிய படக்குழுவினர், இந்த பாடலில் வெற்றியை தொடர்ந்து பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான யூடிவி தனஞ்செயன் அவர்கள் கூறியுள்ளார்.


விஷாலுடன் இந்த பாடலுக்கு நடனம் ஆட இருப்பவர் இனியா. இனியாவின் குத்தாட்டத்தை இந்த படத்தில் வித்தியாசமாக ரசிகர்கள் காணலாம் என படக்குழுவினர் கூறுகின்றனர்.


நூற்றுக்கணக்கான துணை நடிகைகளோடு விஷால்-இனியா ஆடும் இந்த நடனத்தின் படப்பிடிப்பு நாளை முதல் வரும் ஞாயிறு வரை சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடக்கவிருக்கின்றது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் இந்த பாடலோடு முடிகிறது.


அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் வேலை தொடரும் என தனஞ்செயன் கூறியுள்ளார். இந்த படத்தின் இன்னொரு டிரைலர் வரும் 28 ஆம் தேதி வெளிவரும் என்றும், வரும் ஏப்ரல் 11ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்றும் மேலும் அவர் கூறினார்.